• TRENDING | பர பர

புதிய கோணத்தில் பூமி: கூகுளில் அறிமுகமாகும் புதிய 3D Time Lapse அம்சம்!





கூகுள் நிறுவனம் புதியதாக 3 - D டைம்லேப்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 1984 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பூமியின் பல்வேறு இடங்கள் எவ்வாறு மாறியுள்ளது என்பதை பார்க்க முடியும். மேலும் இதன் உதவியுடன் பூமியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும், பல்வேறு நாடுகளும் நகரங்களும் எவ்வாறு மாறியுள்ளன என்பதையும் காண முடியும்.

மேலும் கூகிள் எர்த் புதிய அம்சப்படி, நீங்கள் கிரகத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் பார்க்க முடியும் என்று கூகிள் எர்த், எர்த் எஞ்சின் & அவுட்ரீச் இயக்குனர் ரெபேக்கா மூர் ஒரு வலைப்பதிவு இடுகையில் அறிவித்துள்ளார்.

அதன்படி, கூகிள் எர்த்தில் டைம்லேப்ஸுடன் கடந்த 37 ஆண்டுகளைச் சேர்ந்த 24 மில்லியன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் 4-D அனுபவமாக தொகுக்கப்பட்டுள்ளது. உலகின் கோடிக்கணக்கான மக்கள் இதை தங்கள் இணையம் மூலமாகவோ அல்லது மொபைல்களிலிருந்தோ காணமுடியும் என்று மூர் கூறினார்.

மேலும் கூகிள் எர்த் இல் டைம்லேப்ஸ் அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் g.co/Timelapse க்குச் செல்லலாம் அல்லது கூகிள் எர்த் (Google Earth) மூலமும் பார்வையிடலாம்.

Instagram Link : : https://www.instagram.com/p/CNsNkoWFGp7/?utm_source=ig_web_copy_link

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :