• JUST IN | சுட சுட

#Breaking: டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: ஒரு வாரம் முழு ஊரடங்கு!





டெல்லியில், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், இன்றிரவுமுதல் அடுத்த திங்கள் கிழமை (ஏப்ரல் 26) காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், டெல்லியில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கை:

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா 2-வத் அலை காரணமாக 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து தனியார் அலுவலர்களும் ஊழியர்களும், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றபடி அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அலுவலகங்கள் மட்டுமே இயங்கும்.

-இவ்வாறு டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :