• JUST IN | சுட சுட

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை: உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்!





மகாராஷ்டிராவில்,ரயில்வே தண்டவாளத்தின் கீழே விழுந்த குழந்தையை, உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் ஓடிப்போய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கனி ரயில் நிலையத்தின் நடைமேடையில் சிறுவன் ஒருவன் தனது தாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, தீடீரென்று கால் தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்தான்.அப்போது அதிவேகத்தில் தண்டவாளத்தில் விரைவு ரயில் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷேல்கே என்பவர்,தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் உடனே ஓடிச் சென்று அச்சிறுவனை தூக்கி அவனது தாயிடம் கொடுத்த்தார். ரயில் அவ்விடத்தை கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில் தானும் நடைமேடையில் ஏறி தப்பித்தார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அந்த வீடியோவை ரயில்வே வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனையடுத்து,தனது உயிரைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் செய்லபட்டு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷேல்கேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

twitter link : : https://twitter.com/RailMinIndia/status/1384020082615984131

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :