• GLITTERS | பளபள

கொரோனாவுக்கு மருந்து: ஆயுர்வேத கண்டுபிடிப்பு!


சாந்தி கார்த்திகேயன்





குஜராத்தை சேர்ந்த ’சுக்லா அஷர் இம்பெக்ஸ்’ என்ற நிறுவனம் கொரோனாவை குணமடையச் செய்யும் திரவ ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சிரப் மாதிரி அருந்தக்கூடிய வகையிலான இந்த மருந்தை இரண்டுமுறை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் வெற்றிகரமான பலன் கிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ஆவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த ஆயுர்வேத மருந்து சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை முறியடிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ’ஆயுத் அட்வான்ஸ் என்ற பெயரில் சுக்லா அஷர் இம்பெக்ஸ் என்ற நிறுவனம் இந்த மருந்தை தயாரித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டதாகவும், பக்கவிளைவுகளின்றி, அதேசமயம் வீரியமுடன் இந்த மருந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்ததும் அவர்களின் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் சரியானதாகவும் பின்னர் டெஸ்ட் செய்ததில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தின் முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் குறைந்த அளவு பாதிப்பு உள்ள நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. அதில் நல்ல பலன் கிடைத்ததால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையிலும் அந்த மருந்து நல்ல பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ’ஆயுத் அட்வான்ஸ்’ மருந்தை கொரோனா நோயாளிக்கு ஒரு நாளில் 15 மிலி வீதம் நான்கு முறை கொடுக்கப்பட்டதாகவும், அதற்கான பலன் நான்கு நாட்களில் தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆயுத் அட்வான்ஸ் மருந்து, ரெம்டெசிவிர் மருந்தைவிட மூன்று மடங்கு பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு நிறுவனமான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மருந்து 21 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறதாம்.

கொரோனாவுக்கான தடுப்பூசிகளிலிருந்து இந்த மருந்து எவ்வாறு மாறுபடுகிறது?

இதுகுறித்து ’சுக்லா அஷர் இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீப் சுக்லா தெரிவித்தவை:

‘’கொரோனா தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. ஆனால் ஆயுத் அட்வான்ஸ் மருந்தானது - உடலிலுள்ள கொரோனா வைரஸை அழிக்கிறது.

-இவ்வாறு தீப் சுக்லா தெரிவித்துள்ளார். இந்த மருந்தின் பயன்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்பதாக சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




Comments

M.Kothandapani says :

முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் அனைவருக்கும் நல்லதே...

bhamathynarayanan says :

தற்சமயம் நாட்டிற்கு...உலகுக்கேத் தேவையான அருமையான செய்தி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :