• JUST IN | சுட சுட

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி!





தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :