• TRENDING | பர பர

கடலில் இறங்கிய போர் விமானம்: மக்கள் அதிர்ச்சி! வைரல் வீடியோ!





அமெரிக்காவில் ஒரு கடற்கரையோரம் திடீரென போர் விமானம் ஒன்று வந்து கடலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கோக்கோ பீச் பகுதியில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சாகச நிகழ்ச்சியில் பல்வேறு அமெரிக்க போர் விமானங்கள் பங்கேற்ற நிலையில், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற டிபிஎம் அவெஞ்சர் விமானமும் இடம் பெற்றது. இந்நிலையில் அந்த விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமானி சாமர்த்தியமாக மக்கள் நடமாட்டம் காணப்பட்ட கோக்கோ பீச் கடற்கரையருகே கடலில், விமானத்தை தரை இறக்கியுள்ளார்.

விமானத்தை கடலில் தரை இறக்குவதைக் கண்ட மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து விமானியை மீட்டனர். விமானிக்கு காயம் ஏதும் ஏற்படாத நிலையில், தனக்கு மருத்து உதவி தேவையில்லை என கூறிவிட்டு, தனது வழக்கமான பணிக்கு திரும்பி விட்டார்.

கடற்கரையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் விமானம் கடலில் இறங்குவதைப் பார்த்து அதிர்ச்சியுற்றதோடு, சிலர் அதை வீடியோவில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

twitter link : : https://twitter.com/KamiMoffitt/status/1383474998136819722

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :