• JUST IN | சுட சுட

பீகாரில் இரவு நேர ஊரடங்கு: ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ்!





கொரோனா பரவல் காரணமாக பீகாரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக உள்ளதால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இன்று முதல் தமிழக்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இந்நிலையில் பீகாரில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 15-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் மாலை 6 மணிக்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் ஏற்கனவே மக்கள் கடைப்பிடிக்கும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்றும் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :