• JUST IN | சுட சுட

அதிகரித்து வரும் தொற்று. ஒரே நாளில் உச்சகட்டம். சிவகங்கையில் கோர தாண்டவம்..!





சிவகங்கையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 445 பேர் சிகிச்சையில் இருந்தனர். அவர்களில் 32 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :