• JUST IN | சுட சுட

ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து: ஏப்ரல் இறுதியில் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா ஒப்புதல்!





ரஷ்யாவின் `ஸ்புட்னிக் வி` தடுப்பு மருந்து இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கடந்த ஆண்டு உருவாக்கியது. `ஸ்புட்னிக் வி` என்னும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து வினியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதனையடுத்து, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரஷ்யா முடிவெடுத்து உள்ளது.

கிளாண்ட் பார்மா, பனாசியா பயோடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுடனும் தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் 85 கோடி டோசுக்கும் அதிகமான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் முதல் தவணையாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :