• SPARKLES | மினுமினு

அமெரிக்க பங்குச்சந்தையில் பிட்காயின் மதிப்பு அதிகரிப்பு!





அமெரிக்க பங்குச்சந்தையில் பிட்காயினின் மதிப்பு 62 ஆயிரத்து 741 டாலராக அதிகரித்து புது உச்சம் தொட்டு உள்ளது.

இணையதள பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் கிரிப்டோ-கரன்சியான பிட்காயினின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அமெரிக்காவின் நாஷ்டாக் பங்குசந்தையில் பிட்காயினின் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல் மற்றொரு இணையதள பணமான எத்தேரியமும் மதிப்பு அதிகரித்து 2 ஆயிரத்து 205 டாலராக புது உச்சம் தொட்டது. ஏற்கனவே ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவன அதிபரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பிட்காயினில் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்து உள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :