• JUST IN | சுட சுட

கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!





தமிழநாட்டில் கொரோனா 2-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், அதன் செயல்பாட்டை மருத்துவ நிபுணர்களால் உறுதியாக கணிக்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அரசு தலைமை வழக்கறிஞரிடம், 2-வது அலை தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரை ஏதும் உள்ளதா என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் கூறியதாவது:

கொரோனா வைரசின் 2-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. அலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் உறுதியாகக் கணிக்க முடியவில்லை. தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் உள்ளன.

-இவ்வாறு விஜயநாராயணன் தெரிவித்தார்.மேலும் சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனை இன்று பிற்பகலில் சந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

முதல் அலை மெதுவாக குறைந்து வந்தது உண்மை. ஆனால் , அரசியல் கூட்டங்களும், தேர்தல் பிரசாரத்தின் போது வந்த கூட்டங்களும், கோவில்களில் எந்த கட்டுப்பாடுமின்றி வந்த பக்தர்களும் - அலையை மீண்டும் உயரே எழுப்பிவிட்டது . முக கவசம், சமூக இடைவெளி தவிர பீடி , சிகரெட் பொது இடங்களில் தவிர்ப்பது முக்கியம் . எம்மதத்தினரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வதால் வைரஸ் விலகும். தேவை : நம்பிக்கை,

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :