• TRENDING | பர பர

தமிழில் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்! வைரலாகும் புகைப்படம்!





மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், தமிழில் முதன்முதலாக ஒரு பாடலைப் பாடி அசத்தியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்திய அளவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டராக அறியப்படும் பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார். அவர் தமிழில் ‘ஹே சினாமிகா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் மற்றும் காமெடி கலவையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளதோடு ஒரு பாடலையும் பாடி உள்ளார்.

துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் தமிழில் முதல் முறையாக தயாரிக்கும் படம் ‘ஹே சினாமிகா’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ள நிலையில், உற்சாகத்துடன் துல்கர் சல்மான் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இதுகுறித்து பிருந்தா மாஸ்டரின் பகிர்வு:

இந்த படத்தில் துல்கர் சல்மானின் புதிய அவதாரத்தை தமிழில் பார்ப்பீர்கள். இந்த பாடலை வெறும் 45 நிமிடங்களிலேயே பதிவு செய்து முடித்தோம். கோவிந்த் வசந்தாவின் கவரும் இசையும், மதன் கார்க்கியின் மெல்லிய பாடல் வரிகளும் அருமையாக வந்துள்ளன.

-இவ்வாறு பிருந்தா கூறியுள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :