• TRENDING | பர பர

4 அடி நீளமுள்ள முயல் திருட்டு! கண்டுபிடித்து தந்தால் ரூ 1 லட்சம் பரிசு!





இங்கிலாந்தைச் சேர்ந்த நீண்ட காதுகள் கொண்டு சாதனை படைத்த உலகின் மிகப் பெரிய முயல் ஒன்று திருடப்பட்டுள்ளது. அந்த முயலை கண்டுபிடித்து தருவோருக்கு 1 லட்ச ரூபாய் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின், வொர்செஸ்டர்ஷையரில் வசிக்கும் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் ஒரு அபூர்வ வகை முயலை வளர்த்து வந்தார். நீண்ட காலம் வாழக்கூடிய முயல் வகை என்பதுடன் சுமார் 4 அடி நீளம் இருந்தது.

டேரியஸ் என்று அழைக்கப்பட்ட அந்த முயல், மிக நீண்ட காதுகள் கொண்டு சாதனையும் படைத்துள்ளது. 2010ல் கின்னஸ் உலக சாதனை படைத்த டேரியஸ் என்ற இந்த முயல், இப்போது திருடு போய்விட்டது.

தன் செல்ல முயலை இழந்து தவிக்கும் அன்னெட் எட்வர்ட்ஸ், அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு £1,000 வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தனக்கு இது மிகவும் சோகமான தருணம் என்றும், தயவுசெய்து என் முயலை மீண்டும் என்னிடம் ஒப்படையுங்கள் என்றும் தனது இணையதளப் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :