• JUST IN | சுட சுட

உருமாறிய கொரோனா: அறிகுறிகள் என்னென்ன?





இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்காவில் உருமாறிய சில கொரோனா வைரஸ்கள் மிக வீரியம் கொண்டதாக மாறி இருக்கின்றன. அவை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி இருக்கிறது.

கொரோனா வைரஸ் சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலில் பரவத் தொடங்கியது. அதன் பிறகு உலகம் முழுவதும் பரவியது.

ஆனால் முதலில் தோன்றிய வைரஸ் இன்று பல நூறு உருமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு புதிய வீரியத்துடன் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இன்று கொரோனா 2-வது அலை ஏற்பட்டு. ஒவ்வொரு நாட்டிலும் பல வகையில் உருமாறி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக உருமாறி இருக்கிறது.

முதன்முதலில் கொரோனா தாக்குதல் அறிகுறிகளாக சளி, காய்ச்சல், இருமல், வாசனை அறியும் திறன் குறைவு போன்றவை காணப்பட்டன. ஆனால் உருமாற்றம் அடைந்த 2-வது அலை கொரோனா வைரஸ்கள் வேறுமாதிரியாக செய்லபடுகின்றன.இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள தகவல்கள்:

புதுவகை உருமாறிய வைரஸ்கள் வாய் பகுதியில் எளிதாக தொற்றி விடுகின்றன. அவை பற்குழி, பல் இடுக்கு, நாக்கு பகுதி, தொண்டை ஆகியவற்றில் பல்கி பெருகுகின்றன. இதனால் வாய் துர்நாற்றம், வாய்ப்புண், வாயின் மேல் தாடை பகுதியில் எரிச்சல், தொண்டை புண், நாக்கின் மேல் பரப்பில் வீக்கம், வெடிப்பு, நாவறட்சி, வாய் உலர்தல், எச்சில் உற்பத்தி குறைவு, வாய் அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.

* உடல் சோர்வு, தலை சுற்றல், உடல் வலி.

* பலவீனமாக இருப்பது போன்ற தோற்றம், தடுமாற்றம், எப்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு.

* குமட்டல், உடல்நலம் குறைவு ஏற்பட்டு இருப்பதுபோன்ற ஒருவித உணர்வு, தசையில் ஒருவித வலி, உடல் வீக்கம், தசை எரிச்சல், மூட்டுவலி.

* திடீரென வயிற்றுப்போக்கு, சோம்பல்.

- இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் புதிய வைரஸ் தாக்கம் காரணமாக இருக்கலாம். எனவே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

- இவ்வாறு மருத்துவ நிபுணர்களீன் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் அதிக ஓய்வு எடுக்க வேண்டும். கடினமான எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

ஏழைகள், அன்றாட தினக் கூலிகள், சாலையோர வியாபாரிகள் , குடிசைவாசிகள் ஆகிய எல்லோரையும் மற்றும் இதர மக்களையும் இறைவன்தான் காத்தருள வேண்டும்.

ஆா்.நாகராஜன் says :

இறைவா, உலக மக்கள் அனைவரையும் காப்பாற்று ,பொது மக்களே ,கூட்டுப் பிராா்த்தணை செய்யுங்கள் கந்த சஷ்டி கவசம் படியுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :