• JUST IN | சுட சுட

அடுத்த முதல்வர் யார் தெரியுமா?: பொன்.. ராதாகிருஷ்ணனை அதிர வைத்த பெண்மணி.





தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த பாஜக பிரமுகர் பொன். ராதாகிருஷ்ணனிடம் ஒரு பெண் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்துக் கட்சியினர், மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்படுகிறது. .

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். கோயிலிலிருந்து அவர் வெளியே வந்தபோது, ஒரு பெண்மணி அவரை அணுகி தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று கேட்க, அதற்கு ’’மீனாட்சி அம்மன் தான் முடிவு செய்வார்.. அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார் ராதாகிருஷ்ணன்..

அதற்கு அந்த பெண் ‘ மதுரை மீனாட்சி அம்மனிடம் வேண்டிவிட்டுதான் வருகிறேன். மு.க ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்’’ என்று சொல்ல, இதனை துளியும் எதிர்பார்க்காத பொன். ராதாகிருஷ்ணன், அந்த பெண்ணிற்கு கைக்கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு சென்றுவிட்டா.

பாஜக மூத்த தலைவரிடம், மு.க. ஸ்டாலின் தான் முதல்வராவார் என்று பெண் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

சமீபத்தில் படித்து ரசித்தது: திமுக-அதிமுக , யார் ஜெயிப்பார்கள் ? இரண்டுமே வரும். அதெப்படி ? 2 மே -ல் தானே முடிவு வரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :