• SPARKLES | மினுமினு

பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் நலன்: ஐஏஎஸ் அதிகாரியின் புதிய முயற்சி!





பீகாரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான குந்தன் குமார் அம்மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக தொடங்கியுள்ள "ஸ்டார்ட் அப் சோன்" என்ற அமைப்புக்கு பெரும் பாராட்டுதல்கள் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கின்போது புலம் பெயர் தொழிலாளர்கள் தம் சொந்த ஊர்களூக்கு திரும்பினர். வேலைவாய்ப்பின்மை காரணமாக இன்னலுக்கு ஆளாயினர். இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலார்களில்ன் நலனுக்காக அம்மாநில அரசு அதிகாரியான குந்தன் குமார் ஐஏஎஸ் எடுத்த நடவடிக்கை பலராலும் பாராட்டப் படுகிறது.

அதாவது அவர் "ஸ்டார்ட் அப் சோன்"என்னும் புதிய அமைப்பை சன்பதியா நகரத்தில் நிறுவியுள்ளார்.

இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில் பல விதமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அங்கு புதிதாக உருவாகியுள்ள 49 தொழில்முனைவோர் தற்போது வெற்றிகரமாக பிசினஸ் செய்கின்றனர்.

மேலும் இந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் சக குடியிருப்பாளர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் பல புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.




Comments

G.Ravindran says :

This is truly admirable. Just goes to show what difference a bureaucrat can make if only he decides to take some initiative that improves the lives of so many people. Worth emulating by others

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :