• JUST IN | சுட சுட

புகுஷிமா அணு உலையின் நீரை கடலில் விட ஜப்பான் முடிவு! உலக நாடுகள் அச்சம்!





ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்ட கழிவுநீரை கடலில் கலக்க விடும் நடவடிக்கை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி பாதிப்பால் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. எனினும் அணு உலையில் பயன்படுத்தப்பட்டு வந்த நீர் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த நீரை கடலில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000க்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேமித்து வைத்துள்ள 10 லட்சம் டன் தண்ணீரை கடலில் சேர்க்கும் பணி 2022-ல் துவங்கும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் இந்த முடிவுக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடல்வளம் முற்றிலுமாக அழிக்கப்படும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வருங்காலத்தில் இதனால் மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கிரீன்பீஸ் விசாரணை அமைப்பு எச்சரித்துள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

கலி காலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :