• TRENDING | பர பர

சிரமத்திற்கிடையே, புறாவிற்கு தண்ணீர் கொடுக்கும் சிறுவன்! வைரல் வீடியோ!





பால்கனி அருகே ஒரு புறா அமர்ந்திருக்க, இரக்கத்துடன் சிறுவன் ஒருவன் தண்ணீர் வழங்கிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

கோடைகாலத்தில் பறவை மற்றும் விலங்குகளுக்கு தங்கள் வீட்டிற்கு வெளியிலோ அல்லது பால்கனியிலோ சிறு கிண்ணத்தில் தண்ணீரை வையுங்கள். இதனால் அவற்றின் தண்ணீர் தாகம் தீர்க்கப்படும் எனவும் விலங்கு நல அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சிறுவன், புறா ஒன்றுக்கு, பால்கனி வழியே தண்ணீர் வழங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிறுவன் தனது வீட்டு பால்கனியில் இருந்தபடி, க்ரில் கேட்டின் வழியாக, கரண்டியில் தண்ணீரை ஏந்தி, வெளியே அமர்ந்திருக்கும் புறாவுக்கு கொடுத்து அதன் தாகத்தை தீர்க்க முற்படுகிறான்.

அந்த புறா, ஆரம்பத்தில் சிறுவனை நம்பவில்லை என்று தெரிகிறது. பின்னர் அந்த சிறுவன் முயற்சி செய்து அதன் அருகே தண்ணீரை கொண்டு செல்ல, புறாவும் கரண்டியிலிருந்து தண்ணீரை குடிப்பதைக் காண முடிகிறது.

அரை நிமிட வீடியோவாக இருந்தாலும், சிறுவனின் கருணை மனசு பார்ப்பவரைக் கவர்ந்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நிலையில், சிறுவனின் பெயர், மற்றும் விவரங்களை வெளியிடவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/susantananda3/status/1379635107149967361

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :