• JUST IN | சுட சுட

த்ரிஷா மீது பட அதிபர் புகார்: தயாரிப்பாளர் சங்கம் த்ரிஷாவிடம் விசாரணை!





தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் த்ரிஷா. தற்போது இவருடைய பரமபதம் படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தில் அவருடன் நந்தா, ரிச்சர்டு, வேல ராமமூர்த்தி, சோனா எனப் பலரும் நடித்துள்ளனர். படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து டிரைலரும் தயார் நிலையில் உள்ளதாகவும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கதாநாயகி திரிஷா கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் திரிஷா, விழாவுக்கு வர மறுத்து விட்டார். அத்துடன், ‘‘நயன்தாரா நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அவர் வருவதே இல்லை. எனக்கு ஒரு நீதி. அவருக்கு ஒரு நீதியா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

த்ரிஷாவின் இந்த காட்டமான பதில் குறித்து த்ரிஷா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான திரு புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் சங்கத்தின் மூலம் த்ரிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பட விழாவில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால், தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :