• TRENDING | பர பர

ஆர்டர் செய்தால் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வரும் ரோபோக்கள்!





பொதுவாக, நாம் ஆன்லைனில் ஏதேனும் ஆர்டர் செய்தால், டெலிவரி பாய் அதனை நம் வீட்டிற்கு கொண்டுவந்து தருவார். ஆனால் சிங்கப்பூரில் ஒரு புதுமுயற்சியாக, நாம் ஆர்டர் செய்யும் பொருட்களை, ரோபோக்கள் டெலிவரி செய்வது பிரமிக்க வைத்துள்ளது.

சிங்கப்பூரின் ஒரு பகுதியில்தான் தற்போது புது முயற்சியாக, வாடிக்கையாளர்களீடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில் கேமெல்லோ என்று பெயரிடப்பட்ட இரண்டு ரோபோக்கள் இரண்டு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரோபோக்களில் இரண்டு அறைகள் உண்டு. இவை, அதிகப்படியாக 20 கிலோ வரை பொருட்களை எந்தவித சேதமும் இன்றி கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவை. சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், 700 வீடுகள் கொண்ட குடியிருப்பிற்கு பொருள்களை கொண்டு சேர்க்கும் பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றன. விரைவில் இந்த ரோபோவின் சேவை பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுமாம்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :