• JUST IN | சுட சுட

BREAKING: வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவு!





வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசின் உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதுவே வன்னியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் பல சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்புகளில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு முன்னால் தமிழக அரசு சட்டப்பேரவையில் அவசர சட்டம் கொண்டு வந்து வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :