• TRENDING | பர பர

வரலாற்றில் புதிய சாதனை! விண்வெளிக்குச் செல்லும் முதல் அரபு பெண்!





உலக நாடுகள் பல விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக அரபு பெண் ஒருவர் விண்வெளி செல்ல உள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆண், பெண் என தங்கள் நாட்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்ப, அவர்களும் தங்கள் பங்களிப்பை திறமையாக செய்து வருகின்றனர். இருப்பினும், செல்வச் செழிப்புமிக்க நாடான அரபு அமீரகத்தில் இருந்து ஒரு பெண் கூட இதுவரை விண்வெளிக்கு சென்றது இல்லை.

இந்நிலையில், முதன்முறையாக ஒரு அரபு பெண், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துளளது. நோரா அல் மெட்ரூசி என்ற 27 வயதான பெண் விண்வெளி வீராங்கனைதான் தற்போது பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரபு விண்வெளி ஆராய்ச்சியில் இது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :