• TRENDING | பர பர

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற, இளம் வயது வாலிபர்!





சமீபத்தில், பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் உலக கோடிஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில், உலகின் மிக இளம் வயது கோடீஸ்வரராக 18 வயது வாலிபர் இடம்பெற்றுள்ளார்.

35-வது ஆண்டு கோடிஸ்வரர் பட்டியலை, சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டது. அதில் உலகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 2,775 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தாண்டு மட்டும் 660 பேர் புதியதாக இந்த பட்டியலில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இடம்பெற்றுள்ள அனைவரின் சொத்து மதிப்பும் சேர்த்தால், மொத்தம் 13.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பாகும். இந்த சொத்து மதிப்பு கடந்தாண்டைவிட, 8 ட்ரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இந்தமுறை வெளியாகியுள்ள பட்டியலில், 18 வயதான கெவின் டேவிட் லெஹ்மன் என்ற வாலிபர் இடம்பெற்றுள்ளார். இவர்தான் உலகின் மிக இளைய வயதுடைய பணக்காரர் என போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

கெவின் டேவிட்டின் சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலர் ஆகும். இந்த இளவயதில் கெவினுக்கு இவ்வளவு சொத்து மதிப்பு வர, அவரது தந்தைதான் முக்கிய காரணம். இவரது தந்தை குந்தர் லெஹ்மன், ஜெர்மனியின் மிகப்பெரிய நிறுவனமான ‘Dm-drogerie market’ என்ற நிறுவனத்தை நிறுவியவர்.

இவர் தன்னுடைய சொத்து மதிப்பில் குறிப்பிட்ட பங்கை தன் மகனுக்கு எழுதிவைத்துள்ளார். இதன்காரணமாகவே, கெவின் டேவிட் லெஹ்மனும் இளம் வயது பணக்கார பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :