• JUST IN | சுட சுட

#Breaking: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!





தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, சீர் மரபினருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடும் அளிக்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :