• TRENDING | பர பர

ஒரு மாஸ்க்கின் விலை 22,000 ஆயிரமா?





அமெரிக்காவின் பிரபல ராப் பாடகரான வில்லியம் ஆடம்ஸ், ஹானிவெல் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கிய, ஏர் பியூரிபையர்கள் கொண்ட ஒரு புதுவகையான ஸ்மார்ட் மாஸ்க்கை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் விலை 299 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Will.i.am என அனைவராலும் அறியப்படுபவர் வில்லியம் ஆடம்ஸ். இவர் ராப் பாடகர் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் ஹனிவெல் நிறுவனத்துடன் கைகோர்த்து `சிலிகான் XUPERMASK` ஐ உருவாக்கி உள்ளார்.

இந்த XUPERMASK ஆனது மூன்று சிறிய அளவிலான ஃபேனைக் கொண்டுள்ளதால், அதனால் நல்ல காற்றோட்டம் பெறமுடியும். அதுமட்டுமல்லாமல் இதில் வயர்லெஸ் இயர்போன், மைக்ரோஃபோன், புளூடூத் 5.0 இணைப்பு வசதியும் இடம்பெற்றுள்ளது.

இந்த மாஸ்கைப் பொறுத்தவரை, தொடர்ந்து 7 மணிநேரம் வரை சார்ஜ் நிற்கும் வசதி உள்ளது. பின்னர் தேவைப்பட்டால் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த XUPERMASK கருப்பு மற்றும் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் தயாராகின்றன. விரைவில் இது விற்பனைக்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வில்லியம் கூறுகையில், இந்த மாஸ்க்கானது உயர் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு தேவைப்படும் இந்த காலத்தில், நவீன வாழ்க்கைக்கேற்ப உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பைத் தருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :