• TRENDING | பர பர

தனது பலத்தை நிரூபித்துக் காட்டிய அனுஷ்கா ஷர்மா! வைரலாகும் வீடியோ!





பாலிவுட் நடிகை அனுஷ்கா, தனது கணவரான விராட் கோலியிடம் தனது பலத்தை நிரூபித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா. இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அதன்பின், அவ்வப்போது தங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அதிலும் சில புகைப்படங்கள் வைரலாகிவிடும்.

அந்தவகையில், இதற்கு முன்னதாக குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி பைகளை சுமந்து கொண்டு அகமதாபாத் விமான நிலையத்தில் செல்வது போன்று ஒரு புகைப்படம் வைரல் ஆனது.

அதேபோல் தற்போது, அனுஷ்கா சர்மா வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், அனுஷ்கா பின்னால் இருந்தபடி, விராட் கோலியை அலேக்காக தூக்குகிறார். உடனே விராட் கோலியும் ஒன்ஸ்மோர் கேட்க, தனது பலத்தைக் கூட்டி அவரை தூக்கி தனது பலத்தை நிரூபிக்கிறார் அனுஷ்கா. தற்போது இது சம்பந்தமான வீடியோ 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Instagram Link : : https://www.instagram.com/p/CNWoBuhpQns/?utm_source=ig_embed&utm_campaign=loading




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :