• JUST IN | சுட சுட

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது: தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!





கொரோனா காரணமாக, தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடக்கவிருப்பதால், பல்லியில் நேரடி வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மே மாதம் 3-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ள நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், 12-ம் வகுப்பு தேர்வுகள் எதுவும் ரத்து செய்ய கூடாது என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்விற்கு மிகக் குறைந்த காலமே இருக்கும் காரணத்தால், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன .

இந்த நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுடைய செய்முறைத் தேர்வுக்கு வரும்போது, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் சமூக இடைவெளியுடன் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நேரடி வகுப்புக்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளும் தனித்தனியாக குடிநீர் பாட்டில்கள் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். கையில் சானிடைசர் பயன்படுத்திய பின்னர் தீ சம்பந்தப்பட்ட பொருட்களைத் தொடக்கூடாது. வகுப்பறைகள் காற்றோட்டமாக இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட 21 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :