• JUST IN | சுட சுட

‘ஐபேக்’ ஆபீஸில் ஸ்டாலின் உற்சாக சந்திப்பு!





தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இதனிடையே, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்துக் கணிப்புகளை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

திமுக-வுக்கான தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தது பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறூவனம்! திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் ஐபேக் உடன் தேர்தல் பிரசார உத்தி ஒப்பந்தம் செய்வதில் தங்களுக்கு இருந்த அதிருப்தியை ஸ்டாலினிடம் வெளிப்படுத்தாமல் முனுமுனுத்தனர்.

இந்த சூழலில்தான், பிரசாந்த் கிஷோரின் ஐபேக், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் உத்திகளை வகுத்து செயல்பட்டது. ஐபேக் குழுவினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்து தரவுகளை சேகரித்தது. அதோடு, திமுகவின் வேட்பாளர்கள் தேர்விலும் களப் பணிகளை உத்தரவிடுவதிலும் ஐபேக்கின் பங்கு பெரிதும் இருந்தது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு முன்னதாகவே, ஸ்டாலினின் ’’விடியலை நோக்கி’’ போன்ற பிரசார திட்டங்களை வகுத்து அளித்தது.

ஐபேக் குழுவினர் சென்னை தேனாம்பேட்டையில் அலுவலகம் அமைத்து சுமார் 150 பேருக்கு மேல் தேர்தல் பிரசார உத்திகள் செயல்படுத்துவதையும் தேர்தல் களத்தையும் கண்காணித்து வந்தனர். ஐபேக் குழு வாக்குப்பதிவு அன்று ஒவ்வொரு தொகுதியையும் அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தது.

ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தபின், ஸ்டாலின் தன் மருமகன் சபரீசனுடன் ஐபேக் நிறுவனத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து தொகுதி நிலவரங்களை பிரசாந்த் கிஷோரிடம் கேட்டறிந்தார்.

twitter link : : https://twitter.com/kadaribrahimk/status/1380097007755223043

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :