• TRENDING | பர பர

மணமேடையில் வெற்றுடம்பும் கையில் கட்டுடன் காட்சியளித்த மணமகன்! வைரலாகும் புகைப்படம்!





திருமணம் என்றாலே பிரம்மாண்ட அலங்காரத்திற்கு மத்தியில், சூப்பர் மேக்கப் பும் பளபளக்கும் புத்தாடைகளுடன் மணமகளும், மணமகனும் ஜொலிப்பதைத்தானே பார்த்திருப்போம்?!

இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமகன் மேலாடை இல்லாமல், காயங்களுடன் மணமேடையில் அமர்ந்திருந்த சம்பவம் புகைப்படத்துடன் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு ஜாவாவில், கடந்த 2ம் தேதி, இளம்ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது. அழகாக ஜொலிக்கும் மணமகளுக்கு அருகே, மணமகனோ, கை, கால்களில் காயங்களுடன் மேல் சட்டை அணியாமல் பரிதாபமாக அமர்ந்திருந்தார். இதை புகைப்படம் எடுத்து வெளியிட கிண்டலாகவும் பரிதாபப் பட்டும் கமெண்டுகள் குவியத் தொடங்கின.

உள்ளூர் ஊடகம் ஒன்று, மணமகனின் இந்த நிலை குறித்த செய்தியையும் வெளியிட்டுள்ளது.

அதாவது கடந்த 2-ம் தேதியன்று, சுப்ராப்டோ என்பவருக்கும் எலிண்டா டிவி கிறிஷ்டியானி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சுப்ராப்டோ பெட்ரோல் வாங்க வெளியில் சென்றபோது, ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு உடை எதுவும் அணிய முடியாத சூழல் ஏற்பட்டது.

ஆனால் இதற்காக திருமணத்தை தள்ளிப்போட இருதரப்பு குடும்பமும் விரும்பாததால், குறித்த அதே திருமண தேதியில் மணமகன் கையில் கட்டும் வெற்றுடம்புமாக காட்சியளிக்கும் கோலத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :