தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.
வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி.
ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி.
இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே அனுமதி.
தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி.
விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி.
உணவகங்கள் தேநீர் கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை.
திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி.
அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி.
வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்.
நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி.
-இவ்வாறு புதியகட்டுப்பாடுகளை வருகிற 10-ம் தேதிமுதல் அமல்படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Comments