• JUST IN | சுட சுட

இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்தில் அனுமதி இல்லை!





நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக வரும் 11-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்திய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சென்ற வாரம் புதிதாக 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 17 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது:

"இந்தியாவிலிருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்குத் தற்காலிகமாகவே தடைவிதிக்கப்பட்டுள்ளது"

-இவ்வாறு ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :