• JUST IN | சுட சுட

’அண்ணாத்த’ படப்பிடிப்பு: மீண்டும் ஹைதராபாத் சென்றார் ரஜினி!





ரஜினிகாந்த்தின் 45 வருடத் திரையுலக வாழ்வில் இயக்குனர் சிவா இயக்கத்தில் 168-வது படமாக தற்போது ரஜினி ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

’அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. அச்சமயம் படப்பிடிப்பில் பங்கேற்ற நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ரஜினிக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் அவருக்கும் உடல்நலன் பாதிக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி, ’அண்ணாத்த’ படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். இந்நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றுள்ளார் ரஜினி. சென்னை விமான நிலையத்துக்கு காரில் வந்த ரஜினி அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்.

’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

twitter link : : https://twitter.com/RIAZtheboss/status/1380023300798091266

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :