• JUST IN | சுட சுட

ஐபிஎல் கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் உசேன் போல்ட்!





ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றுமுறை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் தடகள வீரர் உசேன் போல்ட். இவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஜெர்சியை வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இதற்காக போட்டிகளுக்கு ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தடகள வீரர் உசேன் போல்ட், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆடையை அணிந்துகொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ் கொடுத்திருக்கிறார்.

மேலும் அதில், `சேலஞ்சர்ஸ்..நான் உங்களுக்கு ஒன்றைத் தெரியப்படுத்துகிறேன். நான் இன்னும் வேகமான பூனைதான்` என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஆர்சிபி அணியினர் பதிலளித்துள்ளனர். அந்த அணியின் கேப்டன் கோலி, `எங்களுக்குத் தெரியும். அதனால்தான் எங்கள் அணியில் நீங்கள் இருக்கிறீர்கள்` என்றும் பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், `நல்லவேளை.. எங்கள் டீமுக்கு கூடுதல் ரன்கள் சேர்க்க தகுந்த நபர் கிடைத்து விட்டார்’’ என்று பதில் பதிவிட்டிருக்கிறார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :