• TRENDING | பர பர

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த உடும்பு! பயத்தில் அலறிய பொதுமக்கள்!





தாய்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் உடும்பு ஒன்று புகுந்து அனைவரையும் அதிரச் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்கிரேகர் மார்ஷல் என்ற பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுசம்பந்தமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், தாய்லாந்தில் உள்ள 7- லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில், பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு ஷெல்ஃபில், பெரிய சைஸ் உடும்பு ஒன்று, பொருட்களையெல்லாம் தட்டிவிட்டபடி, மேலே ஏறுகிறது. அடுத்த ஷெல்ஃபில் ஏறிய பிறகு சற்றுநேரம் ஓய்வெடுக்கிறது. இதைக் கண்ட பலரும் அலறி சத்தம் போடுகின்றனர். இவ்வாறாக அந்த வீடியோவில் அமைந்துள்ளது.

வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே, இந்த வீடியோவை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். நேரில் பார்த்த பலருக்கும் ஈரக்கொலை நடுங்கினாலும், இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இதற்கு நகைச்சுவையான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

twitter link : : https://twitter.com/zenjournalist/status/1379719584681488385

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :