• TRENDING | பர பர

நீருக்கடியில் ஜிம்னாஸ்டிக்! வைரல் வீடியோ!





நீச்சல் வீராங்கனை ஒருவர், நீருக்கடியில் தனது ஜிம்னாஸ்டிக் திறமையை செய்து அசத்திய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா மகுஷென்கோ. நீச்சல் வீராங்கனையான இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்னாஸ்டிக் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வது வழக்கம். அப்படி லேட்டஸ்டாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகியுள்ளது.

அதில், எந்த சலனமும் இல்லாத நீச்சல் குளத்தின் அடியில், இசைக்கேற்ப தனது உடலை வில்லாக வளைத்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தற்போது இதுசம்பந்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு, வைரலாகப் பரவி வருகிறது.

Instagram Link : : https://www.instagram.com/reel/CNStM2jAHkT/?utm_source=ig_embed

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :