• JUST IN | சுட சுட

கொரோனா பரிசோதனை: சென்னையில் வீடுவீடாக இன்று முதல் ஆரம்பம்!





நாடு முழுவதும் கொரோனா பரவல் 2-ம் அலை வேகமெடுத்திருப்பதை அடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகளும் பரிசோதனைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன.

கடந்த வருடம் மார்ச்முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஒருசில மாதங்களீல் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் நாடெங்கும் கொரோனா 2-ம் அலை மீண்டும் தீவிரமாகி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் மீண்டும் வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :