• JUST IN | சுட சுட

நிருபரை ‘வாக்கிங் ஸ்டிக்’கால் தள்ளிவிட்ட கமல்ஹாசன்: மீடியாக்குழு மத்தியில் பரபரப்பு!





மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தன்னை நெருங்கிப் பேச வந்த ஒரு நிருபரை ‘வாக்கிங் ஸ்டிக்கால்’ தள்ள முயற்சித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கடந்த தேர்தலில் அக்கட்சி அதிக வாக்குகள் பெற்ற இடம் என்பதுடன், திராவிட கட்சிகள் நேரடியாக களமிறங்காத இடம் என்பதாலும் இத்தொகுதியை கமல்ஹாசன் தேர்வு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

இதையடுத்து இன்று காலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கோவை ஜி.சி.டி கல்லூரிக்கு கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்கள் கமலின் வருகையை படம் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், கமல்ஹாசன் அருகே வந்து ஏதோ கேள்வி கேட்க முயற்சிக்க, சட்டென கோபமடைந்த அவர், தனது ‘வாக்கிங் ஸ்டிக்கால் அந்த நிருபரின் கழுத்தில் வைத்து தள்ள முற்பட்டிருக்கிறார். இச்சம்பவம் அங்கு கூடியிருந்த மற்ற பத்திரிகையாளர்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதயடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :