இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி `கேப்டன் 7` என்ற தலைப்பில் புது அனிமேஷன் தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார்.
உளவு தொடரான இந்த `கேப்டன் 7` தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. தோனி 7-ம் எண் பதித்த ஜெர்சியைத்தான் ஐபிஎல் போட்டிகளில் அணிந்திருந்தார். இந்த தொடரை தோனியின் மனைவி சாக்ஷியின் தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கூட்டு சேர்ந்து தயாரிக்கிறது.
இந்தியாவின் முதல் அனிமேஷன் உளவுத் தொடரான இது, அடுத்த ஆண்டு முதல் கிரிக்கெட் சீசனுடன் தொடங்கவிருக்கிறது. "கேப்டன் 7" சாகசங்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று தோனியின் மனைவி சாக்க்ஷி தெரிவித்துள்ளார்.
தோனியை மையமாகக் கொண்டு ஒரு அனிமேஷன் புனை கதையைத் தொடர் நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்கிற ஐடியாவுடன் ப்ளாக் அண்ட் ஒயிட் நிறுவனத்தினர் எங்களை அணுகியபோது, நாங்கள் கப்பலில் இருந்தோம்` என்கிறார் சாக்ஷி. இந்த தொடர் பல சாகசங்கள் நிரம்பியதாக இருக்கும் என்றார்.
’’விளையாட்டு எங்கள் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமானது. நாங்கள் தோனியின் மிகப் பெரிய ரசிகர்கள். இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள தளங்களில் வெளியாகும்’’ என்றனர், பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் நிறுவனத்தினர்.
Comments