• JUST IN | சுட சுட

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி : அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!





அமெரிக்காவில் வருகிற 19-ம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.எனவே அங்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும்பணியில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. இதையடுத்து அங்கு அடுத்தமாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் என்று முன்னர்அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முன்னதாகவே அதாவது வரும் 19-ம் தேதியிலிருந்தே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :