• JUST IN | சுட சுட

செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!





செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

’’இது என்ன மாயம்’’ என்னும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவும் பணம் பெற்று, பின்னர் அதை திரும்பக் கொடுக்காமல் காலதாமதம் செய்த்தாக சொல்லப்படது.

இதனால், ரேடியண்ட் நிறுவனம் சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா மீது வழக்கு தொடுத்தது. சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது 2 வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இன்று ராதிகா மற்றும் சரத்குமார் இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :