• 5 SHOTS | சுறு சுறு





மயிலாடுதுறை அருகிலுள்ளது மூவலூர் - சோழன் பேட்டை. இங்கு 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்தில் செதுக்கப்பட்ட வான முட்டிப் பெருமாள் அருள் பாலிக்கிறார். அகன்று விரிந்த மரத்தின் வேர்தான் பெருமாளின் திருவடிகள். 1,200 ஆண்டுகளுக்கு பின்னரும் மரத்தின் வேர் ஈரப்பதத்துடன் உள்ளது அதிசயம். பிணியால் பீடிக்கப்பட்ட சோழ மன்னன் ஒருவருக்கு மரத்திலேயே விஸ்வரூபத் தரிசனம் தந்தார் பெருமாள். தான் கண்ட காட்சியை மன்னர் விவரிக்க அதன்படியே திருவுருவம் செதுக்கப்பட்டது.

-ஆர்.கே. சுந்தரம், சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :