• TRENDING | பர பர

நேரலையில் மைக்கை பிடிங்கிக்கொண்டு ஜூட் விட்ட நாய்! வைரல் வீடியோ!





ரஷ்யாவில் உள்ள மிர் டிவி என்ற தனியார் தொலைக்காட்சியில், நட்டாஷா சேக்ஸ்கினா என்ற பெண் நிருபராக வேலை பார்த்து வருகிறார். மாஸ்கோவில் தற்போது வசந்த கால வருகைக்காக, நட்டாஷா, பொதுவெளியில் நின்றபடி மைக்கில் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சி, டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது கோல்டன் ரீட்ரைவர் எனப்படும் இனத்தை சேர்ந்த நாய், அவ்வழியாக வாக்கிங் வந்தது. இதைப் பார்த்த நட்டாஷா, அந்த நாய் குறித்து சில வார்த்தைகள் பேச, அருகில் வந்த நாய், மைக்கை பிடுங்கி கொண்டு ஓடியது.

திடுக்கிட்ட நட்டாஷா, மைக்கை நாயிடமிருந்து மீட்பதற்காக நாய் பின்னாடியே ஓட, நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் இதைப் பார்த்து சிரித்தே விட்டனர்.

ஒருவழியாக மைக் மீட்கப்பட்டாலும், அது வேலை செய்யவில்லையாம். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=T3gzWKv6mnU

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :