• JUST IN | சுட சுட

சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!





முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வந்த புகாரையடுத்து, அது தொடர்பாக விளக்கம் அளிக்க உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. இளைஞரணித் தலைவரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் எழுந்தன.

இது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறி, சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மரணமடைந்தனர்.

-இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :