• JUST IN | சுட சுட

விவிபேட் இயந்திரத்தை தூக்கிச் சென்ற நபர்: போலீஸ் விசாரணை!





சென்னை வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் ஒரு நபர் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நேற்று நடந்த தேர்தல் வாக்குப்பதிவின்போது சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. மேலும் சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை மற்றும் தாமரைக்கு செல்வதாக புகார் எழுந்தது.

சில இடங்களில் வாக்கு பதிவானதா என்பதை உறுதி செய்யும் விவிபேட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. இந் நிலையில் சென்னை வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றவர் பிடிபட்டார்.

அவரை போலீசாரிடம் அங்குள்ளவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :