• JUST IN | சுட சுட

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: வாக்காளருக்கான அறிவுரைகள்!





நாளை ( ஏப்ரல் 6) தமிழக சட்டம்னறத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கவுள்ள நிலையில் வாக்களர்களுக்கான தேர்தல் அறிவுரைகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் வெளியிடப்பட்ட தகவல்கல்:

நாளை வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். வாக்காளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.

வாக்குப்பதிவின் போது வரிசையில் சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும் வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் Hand Sanitizer கொடுக்கப்பட்டு பின்பு தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். பின்பு வலது கைக்கு மட்டும் கை உறை வழங்கப்படும்.

உங்களது உடல் வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாக இருந்தால்.. கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்தால்.. மாலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் தகுந்த கவச உடை அணிந்துச் சென்று வாக்களிக்கலாம்.

5.வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு நுழைவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வலது கை உறையை அணிந்தபின் முதலாம் தேர்தல் அலுவலரிடம் தனது பூத் ஸ்லிப், மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அவர் அதை உறுதி செய்தபின் இரண்டாவது தேர்தல் அலுவலரிடம் சென்று 17 A ரிஜிஸ்டரில் கையொப்பமிட்டு, உங்களுடைய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்க வேண்டும். பிறகு அவர் உங்களுக்கு ஓட்டளிக்க Voters Slip வழங்குவார். அதை பெற்றுக்கொண்டு 3வது தேர்தல் அலுவலர் இடம் சென்று அந்த Voters சிலிப்பை கொடுத்த பின்பு அவர் உங்களுக்கு Ballot யூனிட்டில் வாக்களிக்க அனுமதி வழங்குவார்.

நீங்கள் வாக்களிக்கும் இடத்திற்கு சென்று உங்களுடைய கையுறை அணிந்த வலது கை விரல்களால் உங்களுக்குரிய வேட்பாளர் பட்டனை அழுத்தி பீப் சத்தம் வருவதையும், வேட்பாளருக்கு அருகிலுள்ள சிகப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகள் காண்பிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம்.

பிறகு வாக்குசாவடி மையத்தின் வெளியே நீங்கள் அணிந்துள்ள வலது கையுறையை கழட்டி அதற்குரிய பிளாஸ்டிக் குப்பை பையில் போட்டுவிட்டு வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற வேண்டும்.

வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத்தவிர மற்றவர்கள் (வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும்) கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :