• JUST IN | சுட சுட

ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டி: தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தேர்வு!





ஒலிம்பிக் போட்டியானது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தேர்வாகியுள்ளார்.

கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தகுதி சுற்று போட்டிகளின் மூலம் ஒலிம்பிக் இடத்தை பெறா விட்டாலும், தொடர்ந்து சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி வருவதால், அவருக்கு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனி மற்றும் கலப்பு பிரிவில், இளவேனில் வாலறிவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :