• JUST IN | சுட சுட

ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்தது எல்.ஜி நிறுவனம்!





ஸ்மார்ட் போன் தயாரிப்புகள் தங்களது நிறுவனத்துக்கு தொடர்ந்து இழப்பை கொடுத்து வருவதால், அந்த வகை போன்கள் தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக தென் கொரியாவை சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்று (ஏப்ரல் 5) அறிவித்துள்ளது.

கடந்த ஆறாண்டுகளில் மட்டும் சுமார் 450 கோடி பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

செல்போனில் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராக்கள் உட்பட பல புதுமைகளைப் புகுத்திய எல்.ஜி நிறுவனம், 2013ஆம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உயர்ந்தது.

ஆனால், காலப்போக்கில் அலைபேசி சந்தை நம்பமுடியாத அளவிற்கு போட்டி மிகுந்ததாக மாறி தமக்கு நஷ்டம் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக விட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

திறன்பேசி தயாரிப்பு சந்தையில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களாக சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகியவை விளங்கும் நிலையில், எல்.ஜி தனது வன்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த பிரச்னைகளால் சவாலை சந்தித்து வந்தது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

"நம்பமுடியாத அளவிற்கு போட்டி மிகுந்த அலைபேசி துறையிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளோம். ஆனால், மின்சார வாகனம் சார்ந்த பொருட்கள், தானியங்கி சாதனங்கள், ஸ்மார்ட் ஹோம்ஸ், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிகத் தீர்வுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி அத்துறைகளில் முத்திரை பதிப்போம்.

-இவ்வாறு எல்.ஜி.நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே விற்பனையான அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கான வாடிக்கையாளர் சேவைகளும், புதிய மென்பொருள் பதிப்புகளும் தடையின்றி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஜியின் இந்த அறிவிப்பால் அதன் தென் கொரிய போட்டியாளரான சாம்சங் மற்றும் சீன நிறுவனங்களான ஒப்போ, விவோ மற்றும் ஜியோமி போன்றவை அதிக பலன் பெற வாய்ப்புள்ளது என்று கருதப் படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :