• JUST IN | சுட சுட

ஏப்ரல் 7 முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்: சுகாதார துறை செயலாளர்!





இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஊரடங்கு என்பது வதந்தி. ஆனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். நாளை தேர்தல் வாக்களிக்கச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏப்ரல் 7-ம் தேதிக்குப்பிறகு வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என சோதனை நடத்தப்படும். அதேபோல் தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் போதுமான தடுப்பூசி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவின்போது கடைசி ஒருமணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்புபோல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல் தேர்தலுக்குப் பிறகு முழு பொதுமுடக்கம் வரும் என்ற செய்தியை நம்பவேண்டாம்.

-இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :