• TRENDING | பர பர

வாத்தை அன்பாக தட்டிக் கொடுக்கும் சிங்கம்!





சிங்கத்திற்கு வேட்டையாட மட்டுமல்ல.. அன்பை பரிமாறவும் தெரியும் என்பதுபோல், ஒரு சிங்கம் வாத்தின் தலையை தட்டிக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் சிங்கம் ஒன்று ஒரு குளத்தின் அருகே நடந்து வருகிறது. அந்த குளத்தில் சிறு வாத்து ஒன்று கரையோரமாக நீந்தவர அதைக் கண்ட சிங்கம் அதன் தலையின் மீது தனது காலால் அன்பாக தட்டிக் கொடுக்கிறது. அந்த வாத்து நழுவி ஓட, மீண்டும் சிங்கம் தனது காலால் அதன் தலையை தட்டிவிட்டு அன்பை பரிமாறுவதுபோல் அமைந்துள்ளது.

இந்திய வன அதிகாரியான சுசாந்தா நந்தா பகிர்ந்து கொண்ட இந்த வீடியோவை ஆன்லைனில் பார்த்த பலரும், பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவர்களது கருத்துக்களில், அந்த சிங்கத்தின் அன்பான உணர்வுகளை குறிப்பிட்ட நிலையிலும், ஒரு சிலர், அந்த சிங்கமானது வாத்தை வேட்டையாடவே அவ்வாறு செய்தது என்று பதிவிட்டுள்ளனர். சிலர் இதை பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இருந்தாலும் அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியவில்லை எனவும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/susantananda3/status/1374932587362193410

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :