• JUST IN | சுட சுட

வாக்காளர்களே.. உஷார்! கள்ள ஓட்டைக் கண்டுபிடிக்கலாம்! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!





தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது - ஒருவர் தன் வாக்கை பதிவு செய்தவுடன், அவர் யாருக்கு அல்லது எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்ற விவரம் அச்சாவதை பார்வையிடும் வசதி கொண்ட, வி.வி.பி.ஏ.டி இயந்திரத்தை அனைத்து வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

அப்படி வாக்களிக்கும்போது, அந்த இயந்திரத்தில் வேறு நபரின் பெயர் அல்லது வேறு சின்னம் தெரிந்தால் உடனே சம்பந்தப்பட்ட ஓட்டு சாவடி தலைமை அலுவலகத்துக்கு உரிய படிவத்தில் புகார் செய்யலாம். இதன்மூலம் கள்ளஓட்டுகள் போடுவது தவிர்க்கப்படும்.

இந்த புகாரின் அடிப்படையில் அந்த ஓட்டுச்சாவடியில் அதிகாரிகள் முன்னிலையில் அந்த வாக்களர் மீண்டும் வாக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்படுவார். அப்போது அந்த இயந்திரத்தில் விவரம் மாறி பதிவானால் உடனடியாக அந்த ஓட்டுச் சாவடியில் ஓட்டுப்பதிவை நிறுத்தப்பட்டு, தேர்தல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

ஒருவேளை வாக்காளர் தன் வாக்கைப் பதிவு செய்யும்போது வாக்கு இயந்திரத்தில் தவறான தகவல் காண்பிக்கபடாவிட்டால், அந்த வாக்காளர் பொய்க்குற்றம் சாட்டியதாக கருதப்படும். அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கூடும்

வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க செல்லும்போது இதுபோன்ற விஷயங்களில் முன்னெச்செரிக்கையுடன் கவனமாக இருக்கவேண்டும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :